Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2015 ஜூன் 17 , மு.ப. 09:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேசத்தில் நல்லின நடைகளின் இன விருத்திகளையும், கால்நடை உற்பத்திப் பொருட்களையும் அதிகரிப்பது தொடர்பான கலந்துரையாடல், தும்பங்கேணி அமுதசுதபி பால் பதனிடும் நிலையத்தில் இன்று புதன்கிழமை (17) இடம்பெற்றது.
போரதீவுப்பற்று மட்டுப்படுத்தப்பட்ட கால்நடை வளர்போர் கூட்டுறவுச் சங்கத்துக்கும் அரச சார்பற்ற அமைப்புக்களுக்குமிடையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
போரதீவுப்பற்று மட்டுப்படுத்தப்பட்ட கால்நடை வளர்போர் கூட்டுறவுச் சங்கத்தின் நிருவாகத்தினர், உலகதரிசன நிறுவனத்தின் இணைப்பாளர் எஸ்.சிறி, அக்ரெட் நிறுவனத்தின் இணைப்பாளர் இ.கஜேந்திரன் மற்றும் மாம்ஹெமி நிறுவனத்தின் இணைப்பாளர் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.
போரதீவுப்பற்று மட்டுப்படுத்தப்பட்ட கால்நடை வளர்போர் கூட்டுறவுச் சங்கத்தினூடாக இப்பிரதேச கால்நடை வளர்ப்பாளர்களின் நன்மை கருதி நல்லின பசுமாடுகள் மற்றும் ஆடுகள் ஆகியவற்றின் இனவிருத்தி, மாதிரி கோழிப் பண்ணைகளை ஊக்குவித்தல் மற்றும் விலைக்கழிவுடன் நல்லின காளை மாடுகளை பண்ணையாளர்களுக்குப் பெற்றுக்கொடுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
முதற்கட்டமாக இதில் இப்பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்படும் 10 கால்நடை பண்ணையாளர்களுக்கு தலா ஒவ்வொரு நல்லின காளை மாடுகள் 10,000 ரூபாய் விலைக்கழிவுடன் கால்நடை அபிவிருத்தித் திணைக்களத்தினூடாக பெற்றுக்கொடுக்கவுள்ளதாக போரதீவுப்பற்று மட்டுப்படுத்தப்பட்ட கால்நடை வளர்போர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் தெ.சிவபாதம் இதன்போது தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
28 minute ago
1 hours ago
4 hours ago