2025 மே 16, வெள்ளிக்கிழமை

முச்சக்கர வண்டி தீ வைத்து எரிப்பு

Thipaan   / 2015 ஜூன் 20 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் பொலிஸ் பிரிவிலுள்ள ஏறாவூர் காயர் வீதி வீடொன்றில் தரித்து வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி இனந்தெரியாதோரால்  தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (20) அதிகாலை 12.45 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர்-காயர் வீதியைச் சேர்ந்த முஹம்மது யூசுப் சுபைர் என்றவருக்குச் சொந்தமான முச்சக்கர வண்டியே எரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டியின் உரிமையாளர் உறக்கத்திலிருந்தவேளையில் இத் தீ வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அயலவர்களின் உதவியுடன்  தீ பரவாமல் தண்ணீர் ஊற்றி அணைக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.
சுற்றுமதிலுக்கு மேலாக பெற்றல் ஊற்றப்பட்டு தீவைக்கப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.

ஏறாவூர்ப் பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .