2025 மே 16, வெள்ளிக்கிழமை

விபத்தில் இருவர் காயம்

Thipaan   / 2015 ஜூன் 23 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.எ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள் மடம் பகுதியில் இன்று செவ்வாய்கிழமை(23) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவில் இருந்து திருக்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ் வண்டி, மட்டக்களப்பில் இருந்து கல்முனை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மற்றுமொரு தனியார் பஸ்ஸை முந்தி செல்ல முற்பட்டபோது இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

இதனால் இருவர் காயமடைந்ததோடு இரு பஸ் வண்டிகளினதும் கண்ணாடிகள் மற்றும் இதர பொருட்கள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணையை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .