2025 மே 16, வெள்ளிக்கிழமை

நீரோடையில் முச்சக்கரவண்டி வீழ்ந்து விபத்து

Thipaan   / 2015 ஜூன் 23 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி நீரோடையில் இன்று (23) மாலை 2.15 மணியளவில் (பால் வார்த்த ஓடை) முச்சக்கர வண்டியொன்று விழுந்ததால் மூவர் காயமடைந்துள்ளனர்.

காத்தான்குடி கடற்கரைக்கு அருகிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. காத்தான்குடி கடற்கரையோ வீதியால் சாரதி பயிலுனரானரொருவர் வண்டியை செலுத்திவந்தபோதே வண்டி கவிழ்ந்து ஓடையினுள் விழுந்துள்ளது.

தலைகீழாக கவிழ்ந்த முச்சக்கர வண்டியை நிமிர்த்தி மேலே கொண்டு வர பல மணிநேரம் செலவிடப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றபின் வீடு திரும்பியுள்ளனர்.  முச்சக்கர வண்டிக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .