2025 மே 16, வெள்ளிக்கிழமை

'மது அற்ற சமுதாயத்தை உருவாக்குவோம்' விழிப்புணர்வு வேலைத்திட்டம்

Thipaan   / 2015 ஜூன் 24 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மது அற்ற சமுதாயத்தை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளிலான   விழிப்புணர்வு வேலைத்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டதாக சமுகத்துக்கான நண்பர்கள் நிறுவனத்தின் மாவட்ட இணைப்பாளர் பி. தினேஸ் தெரிவித்தார்.

இது தொடர்பான முதலாவது விழிப்புணர்வு வேலைத்திட்டம் புச்சாக்கேணி கிராம சேவகர் பிரிவில் செவ்வாய்க்கிழமை(23) இடம்பெற்றது.

மது மீதான ஆர்வத்திலிருந்து விடுபடும் போது மது பாவினையினை படிப்படியாகக் குறைக்க முடியும்.
மது களைப்பைப் போக்கும் என்கின்ற மூட நம்பிக்கையிலிருந்து முதலில் விடுபடும் போது மதுவினால் ஏற்படக் கூடிய ஆரோக்கியக் கேடுகளிலிருந்தும் சமூகப் பிறழ்விலிருந்தும் ஒருவர் தன்னைத் தற்காத்துக் கொள்ள வழியேற்படும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த விழிப்புணர்வின்போது, மது தொடர்பான தீமைகளை பொதுமக்களுக்கு விளக்கும் துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் சமுதாயம் சார் சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களான கே. சுதர்சன், வி .மோகன்ராஜ்.  புச்சாக்கேணி கிராம சேவகர் பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ. கோமேஸ்வரன் உட்பட கிராம பொதுமக்களும் கலந்து கொண்டனர்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .