Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Thipaan / 2015 ஜூலை 04 , மு.ப. 07:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
2015ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் நிலைப்பாடு தொடர்பாகவும் வேட்பாளர் தெரிவுக்குமான குழு எதிர்வரும் 06.07.2015 திகதி கூடவுள்ளது என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்; செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை உள்ளடங்கிய கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தனித்து படகுச் சின்னத்தில் கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன் தலைமையில் போட்டியிட வேண்டும் என கட்சியின் ஆதரவாளர்களும் பொதுமக்களும் கோரிவருகின்றனர்.
இந்நிலையில், ஆளும் அரசும் தமக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையிலும் இக் குழுவின் அறிக்கையினை அடுத்து இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகவும் கட்சியின் பொதுச் செயலாளர் பிரசாந்தன் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago