2025 மே 15, வியாழக்கிழமை

போதையில் பஸ் செலுத்திய நடத்துனர்: ஐவர் படுகாயம்

Thipaan   / 2015 ஜூலை 05 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மாணிக்கப்போடி சசிகுமார்,ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மதுபோதையில் பஸ்ஸை செலுத்தி தொடர்ச்சியாக 4 விபத்துக்களை ஏற்படுத்தி 5 பேரை படுகாயங்களுக்கு உள்ளாக்கிய தனியார் பஸ் நடத்துனரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தம்மிடம் ஒப்படைத்ததாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) நண்பகல் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.
படுகாயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்தவர்களில் ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவிலும் ஏனைய நால்வரும் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

கொக்கட்டிச்சோலை- கொழும்பு வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்ஸை மதுபோதையிலிருந்த நடத்துனர், கராஜ்ஜுக்கு பஸ்ஸை கொண்டு சென்றுள்ளார்.

இதன்போது, மட்டக்களப்பு லேக் வீதியால் துவிச்சக்கரவண்டியில் சென்ற ஒருவரை மோதிவிட்டு தப்பிச் சென்ற போது, மட்டக்களப்பு நகர் மற்றும் புறநகர் பகுதியில் மேலும் நான்கு வீதி விபத்துக்களை ஏற்படுத்தி 5 பேரை படுகாயங்களுக்கு உள்ளாக்கியுள்ளார்.

பஸ்ஸுடன் தப்பிச் சென்ற பஸ் நடத்துனர், ஜெயந்திபுரம் பகுதியில் பஸ்ஸை நிறுத்திவிட்டு தப்பிச் சென்ற போது துரத்திச் சென்ற பொதுமக்கள், அவரை சரமாரியாக தாக்கியதுடன் மட்டக்களப்பு வீதிப் போக்குவரத்துப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்தநபர் மதுபோதையில் பஸ்ஸை செலுத்தியுள்ளதாகவும் ஒரு வீதி விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற போதே ஏனைய வீதி விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, இரண்டு சைக்கிள்களையும் ஆட்டோ ஒன்றையும் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் குறித்த நடத்துனர் மோதிச் சென்றுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .