2025 மே 15, வியாழக்கிழமை

காத்தான்குடி இஸ்லாமிய நூதனசாலை தற்காலிமாக மூடப்படுகின்றது

Suganthini Ratnam   / 2015 ஜூலை 05 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி இஸ்லாமிய நூதனசாலை  நாளை திங்கட்கிழமையிலிருந்து  தற்காலிகமாக மூடப்படுவதாக முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இலங்கையில் முதன்முதலாக காத்தான்குடியில் தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்தின் அனுசரணையுடன் நிர்மாணிக்கப்பட்ட பூர்வீக நூதனசாலை, கடந்த 15.4.2015 அன்று திறந்துவைக்கப்பட்டது.

இந்த நூதனசாலையில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்றுமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கேட்டுக்கொண்டது. இதற்கமைய, ஜம்இய்யதுல் உலமாவின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு சிலைகளை அகற்றுவதுடன்,  மறு அறிவித்தல்வரை நூதனசாலையை மூடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஜம்இய்யதுல் உலமாவின் வேண்டுகோளுக்கமைய அவை டிஜிட்டல் வடிவில் வடிவமைப்பதற்கான  காலம் தேவைப்படுவதாலும்; நூதனசாலை தற்காலிகமாக மூடப்படுவதாகவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .