Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Thipaan / 2015 ஜூலை 06 , மு.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். பாக்கியநாதன், வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு ரொட்டறிக் பாடும் மீன் கழகத்தின் 56ஆவது புதிய தலைவரின் பதவியேற்பு நிகழ்வு கல்லடி ஓசியானிக் ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை (05) நடைபெற்றது.
புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட ரொட்டறியன் எஸ். சிவரூபனுக்கான அடையாளச் சின்னம் மற்றும் பதவி முத்திரைகளை, விடுகை பெற்றுச் செல்லும் 55ஆவது தலைவர் றொட்டறியன் டொமிங்கோ ஜோர்ஜ் கையளித்தார்.
இந்நிகழ்வில் கூடுதல் கணிசமான பணத் தொகையை சர்வதேச ஹொட்டறிக் கழகத்துக்கு வழங்கியமைக்காக ரொட்டறியன் எம்.டி. வினோபா இந்திரனுக்கு ஞாபகச்சின்னம் ஒன்றையும், 2015-2016 ஆம் ஆண்டுக்கான கபினட் சபையின் உறுப்பினர்களுக்கு விருதுகளையும் மற்றும் சிறந்த பொருளாளராக பணிபுரிந்தமைக்காக றொட்டறியன்
பி. முத்துலிங்கத்துக்குரிய விருதையும் ரொட்டறியன் டொமிங்கோ ஜோர்ஜ் வழங்கிக் கௌரவித்தார்.
புதிய தலைவருக்கான அறிமுகத்தை ரொட்டறியன் வைத்திய கலாநிதி கருணாகரன் அறிமுகம் செய்தார்.
நிகழ்வின் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட மாவட்ட ஆழுனர் ரொட்டறியன் சேனக அமரசிங்கவை ரொட்டறியன்
எம்.டி. வினோபா இந்திரன் அறிமுகம் செய்தார்.
மாவட்ட உதவி ஆழுனர் ரொட்டறியன் பலிக் காதர், சர்வதேச ரொட்டறிக் கழகத்தின் 2015-2016 ஆண்டுக்கான தலைவர்
கே. ஆர். ரவீந்திரன், ஆர். ஐ. மாவட்டம் 3220 மாவட்ட ஆழுனர் ஜோர்ஜ் ஏ. ஜேசுதாசன் மற்றும் சர்வதேச லயன்ஸ் கழகத்தின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவர் கலாநிதி கே. செல்வராஜா ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago