2025 மே 15, வியாழக்கிழமை

மு.கா. தனித்து போட்டியிடவேண்டும்: றம்ழான்

Suganthini Ratnam   / 2015 ஜூலை 07 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்டத்தில் தனித்து போட்டியிட வேண்டுமென்று மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னால் உறுப்பினர் என்.கே.றம்ழான் தெரிவித்தார்.

இது தொடர்பாக நேற்று செவ்வாய்க்கிழமை (07) அவர் விடுத்துள்ள அறிக்கையில், 'எதிர்வரும் பொதுத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தேசிய ரீதியாக எந்தவொரு பொரும்பான்மைக் கட்சியுடன் கூட்டு சேர்ந்து போட்டியிட்டாலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் தனித்தே போட்டியிடவேண்டும். இந்நிலையிலேயே, முஸ்லிம் காங்கிரஸினால் பாதுகாக்கப்பட்டுவந்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பாதுக்கமுடியும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

'பரம எதிரிக் கட்சிகள் கூட்டாக அங்கம் வகிக்கும் அணியில் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து போட்டியிடுவதன் மூலம் கட்சியின் ஆரம்பகாலம் முதல் இறுதிவரையும் பாதுகாக்கப்பட்டுவந்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடுவதுடன், முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களின் வாக்குகள் மூலம் அக்கட்சியின் எதிரிகளுக்கு களம் அமைத்து கொடுக்கின்றதாகவும் அமையும் என்பதை கட்சித்தலைமை கவனத்திற்கொள்ள வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .