Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஜூலை 08 , மு.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் பல கட்சிகள் போட்டியிட்டு தமிழர்களின் வாக்குகள் சிதறடிக்கப்படுவதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாதென்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, வாவிக்கரை வீதியிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், 'தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமே போட்டியிடும். ஆனாலும், இணைந்து போட்டியிடுவதா அல்லது தனித்துப் போட்டியிடுவதா என்பது தொடர்பில் எதிர்வரும் 10ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்' என்றார்.
'தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி; கிழக்கு மாகாணத்தில் ஆதிக்கம் செலுத்துகின்ற கட்சி. கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்களின் விகிதாசாரம் மிகவும் குறைவாகவுள்ளது. ஆகக்கூடியதாக இரண்டு ஆசனங்களை இங்கு பெறமுடியும். மட்டக்களப்பில் ஆகக்கூடுதலாக நான்கு ஆசனங்களை பெறக்கூடியதாகவுள்ளது. அம்பாறையில் ஓர் ஆசனத்தையே பெறமுடியும். ஆதலினால், திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் பல கட்சிகள் போட்டியிட்டு தமிழர்களின் வாக்குகள் துண்டாடப்படுவதை என்னைப் பொறுத்தவரையில் ஒரு தமிழனாக இருந்துகொண்டு என்னால் ஏற்கமுடியாது. அங்கு சிறந்த வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு தமிழர்களுக்கு சேவையாற்றக்கூடியவர்கள் நாடாளுமன்றம் அனுப்பப்படவேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago