Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஜூலை 08 , மு.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
ஊழல் மோசடியில் ஈடுபடாதவர்களையே இம்முறை நாடாளுமன்றத்துக்கு மக்கள் அனுப்புவார்கள் என மக்கள் விடுதலை முன்னிணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்து நெத்தி தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுப்பத்திரத்தில் கையொப்பமிடும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு பாலமுனை பிரதேசத்திலுள்ள முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், "முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் அவரின் சார்பில் ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்களும், கெஸினோக்காரார்களும், போதைவஸ்த்துக் கடத்தல் காரர்களுமே நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டனர். ஆனால், இந்த முறை சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்கள் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்வார்கள்.
மேலும் வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் மக்கள் விடுதலை முன்னணி நாடாளுமன்ற தேர்தலில் சிறந்த வேட்பாளர்களை நிறுத்தவுள்ளது" என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago