Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஜூலை 09 , மு.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.நிரோஷினி
எதிர்வரும் பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவது தொடர்பில் ஆராய்ந்துவருவதாக முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலி தெரிவித்தார்.
நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுவது தொடர்பில் நேற்று புதன்கிழமை (08) கேட்டபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 'நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்டத்திலும் வன்னியிலும் தனித்து போட்டியிட வேண்டுமென்று மாவட்டங்களின் கட்சி முக்கியஸ்தர்கள் அழுத்தம் கொடுக்கின்றனர்.
இது தொடர்பில் கட்சியின் உயர்மட்டக்குழு தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றது. விரைவில் இதற்கான முடிவை அறியத்தருவோம்' என்றார்.
'மேலும், கட்சி சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர் தெரிவுக்கான நேர்முகப் பரீட்சைகள் இன்னும் நடைபெறவில்லை. விரைவில் வேட்பாளர்களின் பெயர்களையும் வெளியீடுவோம்' எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago