2025 மே 15, வியாழக்கிழமை

'வட, கிழக்கு தமிழர்கள் சரியான தலைமைத்துவத்தின் கீழ் வழிநடத்தப்பட்டனர்'

Suganthini Ratnam   / 2015 ஜூலை 09 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மாணிக்கப்போடி சசிகுமார்

'வடக்கு, கிழக்கு வாழ் தமிழர்கள் சரியான தலைமைத்துவத்தின் கீழ் வழிநடத்தப்பட்டதன் காரணமாக நாம் தமிழர்களாகவும் எமது மொழியை பின்பற்றுபவர்களாகவும் இருப்பதுடன்,  தமிழ் இனத்தையும் காப்பாற்றி வருகிறோம்'  என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான  முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
 
மட்டக்களப்பு பார் வீதியிலுள்ள அவரது அலுவலகத்தில் புதன்கிழமை (08) மாலை நடைபெற்ற  ஆதரவாளர்களுடனான சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், 'இந்நாட்டின் ஏனைய பகுதிகளில் தமிழினம் தமது அடையாளங்களை இழந்துநிற்கின்ற நிலையில், வடக்கு, கிழக்கு மகாணங்களில் தமிழினம் தங்களது அடையாளத்தை பாதுகாக்கின்றதெனில், அது தந்தை செல்வாவை முன்நிறுத்திய தலைமைத்துவமும் அவர்கள் கொண்டுவந்த வழியுமென்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்' என்றார்.

'மேலும், எமது மக்கள் குறைந்தது 80 அல்லது 85 சதவீதம் வாக்களிக்கவேண்டும். இந்த மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் அளிக்கும் வாக்குவீதத்தை தாண்டி, அதிகளவில் நாங்கள் வாக்களிக்கவேண்டும். இல்லாவிட்டால், நாங்கள் எமது இலக்கை அடையமுடியாது' எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .