2025 மே 15, வியாழக்கிழமை

'காணாமல் போனவர்கள் தொடர்பில் புதிய அரசாங்கம் தெரியப்படுத்தவேண்டும்'

Suganthini Ratnam   / 2015 ஜூலை 10 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்

காணாமல் போனவர்களின் நிலை என்ன என்பது தொடர்பில்  எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதிக்கு பின்னர் புதிய அரசாங்கம் தெரியப்படுத்த வேண்டுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

அம்பிளாந்துறையிலுள்ள அவரது இல்லத்தில்  நேற்று வியாழக்கிழமை (09) நடைபெற்ற ஆதவாளர்களுடனான சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், 'பல வருடங்களாக சிறையில் வாடிக்கொண்டிருக்கின்ற  எமது உறவுகள் தொடர்ந்தும் சிறையில்  வாடிக்கொண்டிருப்பதை  அனுமதிக்கமுடியாது. இந்த அவல நிலைக்கு பதில் கிடைக்கவேண்டும். அதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல பிரயத்தனங்களை செய்துவருகின்றது' என்றார்.

'மேலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் காணாமல் போன எமது உறவுகள்,  இந்த  நல்லாட்சியில் மீட்டுத்தரப்படுவார்கள் என்று நம்பியும் காணமல் போனோர் தொடர்பில்  எந்த நல்லெண்ணக் கருத்துக்களையும் புதிய அரசாங்கம் இதுவரையில்  வெளியிடமல் இருப்பதும் வேதனைக்குரியது' எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .