Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Thipaan / 2015 ஜூலை 09 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா,எம்.எஸ்.எம்.நூர்தீன்
ஜனாதிபதி மைத்திரிபாலவின் ஆலோசனைக்கமைய போதைவஸ்து பாவனை அற்ற நாட்டினை உருவாக்கும் திட்டத்தின் கீழ், தேசிய போதை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு வியாழக்கிழமை(09) மட்டக்களப்பு, காத்தான்குடியில் மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
காத்தான்குடி பொலிஸ் நிலையம் மற்றும் காத்தான்குடி முச்சக்கரவண்டி சங்கம் மற்றும் கல்வி திணைக்களம் என்பவற்றின் ஏற்பாட்டில், போதைப்பொருளை நாட்டில் இருந்து விரட்டியடிக்க தாங்களும் ஒன்றிணையுங்கள் என்னும் தொனிப்பொருளில் இந்த ஊர்வலம் நடாத்தப்பட்டது.
இந்த நிகழ்வில், காத்தான்குடி பிரதேச உதவி பொலிஸ் அத்தியட்சர் வி.எம்.எம்.தஸாநாயக்க மற்றும் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.வெலகெதர,பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி துசார உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது மட்டக்களப்பு மற்றும் மட்டக்களப்பு மத்தி வலயத்துக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள், போதைப்பொருளுக்கு எதிரான பதாகைகளை தாங்கியவாறு பேரணியில் கலந்துகொண்டனர்.
நற்பாதையை தடுக்கும் போதை வேண்டாம், போதையை ஒழித்து விபத்தை தடுப்போம்,போதையை ஒழித்து மேதைகளாவோம் போன்ற சுலோகங்கள் தாங்கிய பதாகைகளை ஏந்தியிருந்ததுடன் போதை பாவனைக்கு எதிரான கோசங்களையும் எழுப்பினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago