Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஜூலை 15 , மு.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
'மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் காலங்களில் பிரதேசவாதமும் இனவாதமும் பெரும் சாபக்கேடாக உருவெடுப்பது வழமையாகும். இந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைப்பதே நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதான இலக்காகும். அதற்காகவே நாம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுடன் உடன்பாட்டின் அடிப்படையில் இணைந்து போட்டியிடுகின்றோம்' என மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளரும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளருமான பொறியியலாளர் எம்.எம். அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் திங்கட்கிழமை வேட்புமனுவைக் கையளித்த பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், 'ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்குமிடையில் ஓர் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவிருக்கிறது. அதற்கான சரத்துக்கள் ஏற்கனவே உடன்பாடு காணப்பட்டிருக்கின்றன. இந்தப் பிரதேசத்தில் தேர்தல் காலங்களில் பிரதேசவாதமும் இனவாதமும் தூண்டிவிடப்படுகின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே எமது இரு கட்சிகளுக்குமிடையிலான உடன்படிக்கையின் பிரதான அம்சமாக இருக்கிறது.
அதேபோன்று நல்லாட்சியை வலுப்படுத்த வேண்டியதன் அடிப்படையிலேயே தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்க வேண்டும் என்பதும் முக்கிய அம்சமாகும். இவ்வாறு பல அம்சங்களை உள்ளடக்கிய உடன்படிக்கையை முஸ்லிம் காங்கிரசுடன்; செய்து கொள்ளவிருக்கிறோம்' என்றார்.
மேலும்'நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி ஒருவர் மீண்டும் நாடாளுமன்றத்துக்கு வர நினைப்பதென்பது ஒரு துரதிஷ;டவசமான புதிய வரலாறாகும். அவ்வாறு அவர் வருவது ஜனநாயகத்துக்கும் நல்லாட்சிக்கும் பாரிய அச்சுறுத்தலாக அமையும். எனவே அதனை நாம் முறியடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாம் இந்தக் கூட்டணியில் உடன்பாடுகளின் அடிப்படையில் இணைந்திருக்கிறோம்' எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
40 minute ago
2 hours ago
4 hours ago