Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஜூலை 30 , மு.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-.ஏ.எச்.ஏ.ஹுஸைன்
'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எனது தலைவர் என்று எங்கேயும் ஒருபோதும் நான் பிரசாரம் செய்யவில்லை. எனது தலைவர் எம்.ஜி.ஆர். என்றே எல்லா தேர்தல் பிரசார மேடைகளிலும் நான் கூறியிருந்தேன்' இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டத்துக்கான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொடியப்புஹாமி பியசேன தெரிவித்தார்.
இது தொடர்பில் நேற்று புதன்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், '2010ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் என்னோடு ஓரணியில் போட்டியிட்ட சந்திரநேரு சந்திரகாந்தன் மற்றும் தோமஸ் வில்லியம் ஆகிய இருவரையும் நிராகரித்துவிட்டு மக்கள் என்னை தெரிவுசெய்தார்கள்.
சேவையினால் மக்களின் மனங்களை கவர்ந்த நான் அதன் மூலமாக மக்களால் தெரிவுசெய்யப்பட்டேனே தவிர, வெறும் வெட்டிப்பேச்சு மற்றும் அறிக்கைகள் மூலமாகவோ அல்லது தேசியப்பட்டியல் மூலமாகவோ நாடாளுமன்றம் சென்றவன் அல்ல.
அடிமட்ட ஏழை மக்கள், கைம்பெண்கள், அநாதைகள், மாணவர்கள் என்று தொடங்கி இளைய சமுதாயத்தினர் வரை எனது சேவை வியாபித்துள்ளது. அதன் மூலமாகவே நான் மக்கள் அபிமானத்தைப் பெற்றேன்' என்றார்.
'மேலும், கோவில்களையும் பாடசாலைகளையும் வைத்தியசாலைகளையும்; எனது அபிவிருத்திப் பணிகள் சென்றடைந்திருக்கின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைப் போன்று மக்களை ஏமாற்ற நான் ஒருபோதும் விரும்பவில்லை. ஒருபோதும் நான் சோரம் போகவில்லை.
75 வருடகாலமாக கூட்டணியினர்; செய்யாத அபிவிருத்திகளை நான் அரசுடன் இணைந்து செய்திருக்கின்றேன். தமிழ் மக்கள் தமது சந்ததிக்காக சிந்திக்க வேண்டும்.
முஸ்லிம்கள் அரசுடன் இணைந்து வேண்டியதைச் செய்திருக்கின்றார்கள். அரசுடன் இணைந்ததிலிருந்து எனது நிம்மதி பறிபோனது. ஆயினும் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக எனது சேவைகளைச் செய்திருக்கின்றேன்.' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago