2025 மே 14, புதன்கிழமை

தேர்தல் பற்றிய அசமந்தப்போக்கே வாக்களிப்புக் குறைவுக்கு காரணம்

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 06 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிப்பு விகிதாசாரம் மிகவும் குறைவாக இருப்பதற்கு தமிழ் மக்களின் தேர்தல் பற்றிய அசமந்தப்போக்கே காரணமாகும் என்று மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடும் எஸ்.மாமாங்கராஜா தெரிவித்தார்.

கதிரவெளியில் செவ்வாய்க்கிழமை (04) மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

நடைபெறவுள்ள தேர்தல் மட்டக்களப்பு தமிழ் மக்கள் மத்தியில் பாரிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இரண்டு இலட்சத்து 84 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்ட இம் மாவட்டத்தில் வாக்களிப்பு விகிதாசாரம் மிகக் குறைந்ததற்கு தமிழ் மக்களின் தேர்தல் பற்றிய அசமந்தப்போக்கே காரணமாகும்.

இந்தத் தேர்தலில் கிராமப்புற மக்கள் தங்களது ஜனநாயக உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார்கள்.ஆகவே இம்முறை தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கக்கூடிய வாய்ப்பிருக்கிறது.
முஸ்லிம் மக்கள் தங்களது அரசியல் விடயங்களில் மிகவும் தெளிவானவர்களாக இருக்கின்றார்கள். அவர்களுடைய தெளிவு நம் மக்களிடமும் ஏற்பட்டாக வேண்டும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .