2025 மே 14, புதன்கிழமை

தமிழ் மொழி பாடநெறியை பூர்த்தி செய்து வெளியேறும் பொலிஸார்

Thipaan   / 2015 ஓகஸ்ட் 08 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்

தமிழ் மொழி பாடநெறியை பூர்த்தி செய்து வெளியேறும் சிங்கள மொழிமூல பொலிஸாரின் கலை நிகழ்வுகள் கல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் இன்று சனிக்கிழமை (08) நடைபெற்றன.

தமிழ் பேசும் மக்களின் நன்மை கருதி தமிழ் பிரதேசங்களில் கடமையாற்றும் சிங்களப் பொலிஸாருக்கும் பொலிஸ் நிலையம் நாடி வரும் மக்களுக்கும் சினேகபூர்வமான உறவை ஏற்படுத்தும் நோக்கொடு இப்பாடநெறிகள் ஆரம்பிக்கப்பட்டதாக பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் பொறுப்பாளர் கே. பேரின்பராஜா தெரிவித்தார்.

5 மாத கால தமிழ் டிப்ளோமா பயிற்சியை நிறைவு செய்த 10 ஆவது அணியில் 131 பொலிசார் அடங்குகின்றனர் அவர்களினால் பாடல், நாடகம், நடனம் உள்ளிட்ட கலை நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன.

மட்டக்களப்பு அம்பாiறு பிரதிப் பொலிஸ் மா அதிபர் யு.கே. திசாநாயக்க, மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் உபாலி ஜெயசிங்க, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களான பி.ஜே. ஜினதாச மற்றும்  பண்டார ஹக்மன, ஆகியோர் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .