2025 மே 15, வியாழக்கிழமை

'தென்னிந்தியாவில் ஒரு இலட்சம் தமிழர்கள் அகதி முகாம்களில் வாழ்கின்றனர்'

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 14 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.சேயோன்

தென்னிந்தியாவில் ஒரு இலட்சம் தமிழர்கள் அகதி முகாம்களில் வாழ்கின்றனர் என்று மகிழடித்தீவில் நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் எஸ்.எஸ்.அமல் (வியாழேந்திரன்) தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'உயிர்களை இழந்து, பலர் உடைமைகளை இழந்தும் உள ரீதியாகவும்  பாதிக்கப்பட்டுள்ளனர்.  தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் ஒரு கட்சி என்றால் அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே. கடந்த காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைச்சுப் பதவிகளுக்கும் அற்ப,சொற்ப ஆசைகளுக்கும் ஆசைப்பட்டிருந்தால், தமிழர்களுக்குரிய தீர்வை நோக்கிச் சென்றிருக்க முடியாது.

தமிழர்கள்  பூர்வீகமாக  இங்கு  வாழ்கின்றனர். அவர்களுக்கு என்று ஒரு மொழி உண்டு. கலை  உண்டு. கலாசாரம் உண்டு. பண்பாடு  உண்டு. தமிழர்களின் தனித்துவ அடையாளங்கள் பேணப்பட வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் இன்று கோருவது வடக்கு, கிழக்கு இணைந்த  தாயகம். எமது தேசத்தில் நீதி, நியாயத்துடனும் சம  உரிமையுடனும்; சமத்துவத்துடனும் எமது மக்கள் நடத்தப்பட வேண்டும் என்று தேசியம் தாண்டி சர்வதேசம்வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  குரல் கொடுக்கின்றது' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .