2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

22 கிராம் ஹெரோய்ன் மீட்பு; 4 பேருக்கு விளக்கமறியல்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 11 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

நாலரை இலட்ச ரூபாய் பெறுமதியான 22 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரையும் ஏழு நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைத்து விசாரிக்கப்படுவதாக ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி தீப்தி விஜயவிக்ரம தெரிவித்தார்.

ஹெரோய்ன் கடத்தலுடன் சம்பந்தப்பட்டனர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரான சாஹுல் ஹமீதும் அவரது மற்றைய மூன்று சகாக்களும்  எதிர்வரும் 20ஆம் திகதி வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 
      
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெறுவதாகவும் பொலிஸ் பொறுப்பதிகாரி தீப்தி விஜயவிக்ரம மேலும் கூறினார்.

ஏறாவூர் பொலிஸாரின் போதைப் பொருள் தடுப்பு வரலாற்றில் கைப்பற்றப்பட்ட ஆகக் கூடுதல் பெறுமதி வாய்ந்த போதைப் பொருள் இதுவாகும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X