2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

47 பேரை பதம்பார்த்த குரங்குகள்

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 26 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடி நகரசபை பிரிவில் இந்த வருடத்தின் ஜனவரி மாதத்திலிருந்து இதுவரையில் 47 பேரை குரங்குகள் கடித்துக் காயப்படுத்தியுள்ளதாக காத்தான்குடி நகரசபைத் தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.

காத்தான்குடியில் குரங்குகளின் தொல்லை அதிகரித்துள்ள நிலையில் சிறுவர்கள், மாணவர்கள் எனப் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  கூட்டம் கூட்டமாக வரும் குரங்குகள் வீடுகளின் கூரைகள்,  வீடுகளிலுள்ள பயிர்கள், மரங்கள் உள்ளிட்டவற்றை சேதமாக்குகின்றன.

இது தொடர்பில்  மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டியதுடன்,  மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்துக்கு கொண்டுவந்ததாகவும் அவர் கூறினார்.

அத்துடன்,  குரங்குகளை சுடுவதற்காக துப்பாக்கி வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சிடம் காத்தான்குடி நகரசபையால் வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

காத்தான்குடி சுகாதார அலுவலகம், காத்தான்குடி ஆதார வைத்தியசாலை, காத்தான்குடி பிரதேச செயலாளர் ஆகியோரின் கடிதங்களுடன் பாதுகாப்பு அமைச்சிடம் இந்தக் குரங்குகளை சுடுவதற்காக துப்பாக்கி வழங்குமாறு கோரி கடந்த மாதம் 10ஆம் திகதி கடிதம் ஒன்றை அனுப்பியதாகவும் அவர் கூறினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X