2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

5 மாதங்களின் பின்பு மாணவியின் சடலம் தோண்டியெடுப்பு

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 05 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடிவேல் சக்திவேல்
, கணகராசா சரவணன்

பாம்புக்கடிக்கு இலக்காகி கடந்த பெப்ரவரி மாதம் உயிரிழந்ததாக கூறப்படும் களுவாஞ்சிக்குடி,  மகிழூர்முனையை சேர்ந்த பல்கலைகழக மாணவியின் சடலம் அடக்கம் செய்யப்பட்டு ஐந்து மாதங்களின் பின்னர் செவ்வாய்க்கிழமை (05) மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டது.

களுவாஞ்சிகுடி சுற்றுலா, நீதவான் நிதிமன்ற நீதவான் அப்துல் றியாழின் உத்தரவுக்கு அமைய அவரின் முன்னிலையிலேயே சடலம் தோண்டியெடுக்கப்பட்டது.

இதன்போது  அம்பாறை பொது வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரி வி.எம்.ஓ.பெரேரா, மாணவி சார்பானவழக்கறிஞர் எஸ்.தாரணி மற்றும் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்த ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.

களணி பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீட மாணவியான  கங்காதரன் மாதுமை என்ற 22 வயது யுவதி கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி உயிரிழந்தார்.

இவர் பாம்புக்கடிக்கு இலக்காகி உயிரிழந்ததாக வைத்திய பரிசோதனையின்போது தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மாதுமையின் தாயாரான கங்காதரன் திலகவதி கடந்த 2.06.2014 அன்று களுவாஞ்சிகுடி சுற்றுலா, நீதவான் நிதிமன்றத்தில் வழக்குதாக்கல் செய்திருந்தார்.

இதன்போது மாணவியின் சடலத்தை மீண்டும் தோண்டியெடுக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்ததார். இந்நிலையிலே சடலம் இன்று தோண்டியெடுக்கப்பட்டது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X