2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

50,000 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்க நடவடிக்கை

George   / 2014 செப்டெம்பர் 20 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐம்பதாயிரம் குடும்பங்களுக்கு இலவச நீர் இணைப்புவழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மீள்டியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

 மட்டக்களப்பு மாவட்டத்தில் வரட்சிக்காலங்களில் பொதுமக்கள் எதிர்நோக்கும் நீர் தட்டுப்பாட்டினை நீக்கும் வகையில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையுடன் இணைந்து இந்த திட்டத்தினை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.

பட்டிருப்பு தொகுதியில் முதல் கட்டமாக 3000 குடும்பங்களுக்கு நீர் இணைப்புகளை வழங்கவுள்ளதாகவும் களுதாவளை மற்றும் குருக்கள்மடம் பிரதேசத்தில் உள்ள ஆயிரம் குடும்பங்களுக்கு நீர் இணைப்பினை வழங்குவது தொடர்பிலும் ஆய்வுசெய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X