Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
Freelancer / 2022 மே 17 , மு.ப. 09:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 4வது தடுப்பூசியாக பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் இன்று இதை (17) தெரிவித்தார்.
60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட்-19 தொற்று பரவக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக காணப்படுவதால் உடனடியாக 4வது பைசர் தடுப்பூசியினை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுள்ளார்.
சுகாதார வைத்தியதிகாரி அலுவலகங்களில் அல்லது சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்தினால் தெரிவு செய்யப்பட்டுள்ள தடுப்பு மருந்து வழங்கும் இடங்களுக்குச் சென்று தடுப்பூசியினை ஏற்றிக்கொள்ளுமாறு அறிவித்துள்ளார்.
இதேவேளை பாடசாலை மாணவர்களுக்கு கொவிட்-19 இரண்டாவது பைஸசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலும், வெளிநாடு செல்பவர்களுக்கு கொவிட்-19 பைசர் தடுப்பூசியினை கட்டாயம் பெற்றுக் கொள்ள வேண்டுமெனவும், பொதுச் சுகாதார பரிசோதகர்களை தொடர்பு கொண்டு தமக்கான தடுப்பூசியினை பெற்றுக் கொள்ளுமாறும் கேட்டுள்ளார். (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago