2025 மே 19, திங்கட்கிழமை

‘75 சதவீதமானவை காணி குறித்த முறைப்பாடுகள்’

Editorial   / 2018 மார்ச் 07 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித், துஷாரா

“மட்டக்களப்பு மாவட்டத்தில் கிடைக்கின்ற முறைப்பாடுகளில் சுமார் 75 சதவீதமானவை, காணி தொடர்பானவையாக இருக்கின்றன” என, மாவட்டச் செயலாளர் மா.உதயகுமார் தெரிவித்தார்.

“மாவட்டத்திலுள்ள பிரச்சினைகளில் முக்கியமானது காணிப் பிரச்சினை, மற்றையது மண். இந்த இரண்டு சம்பந்தமாகவும் நாங்கள் முக்கியமாகக் கவனம் செலுத்த வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.  

கிழக்கு மாகாண காணி நிர்வாகத் திணைக்களத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற வருடாந்த காணி மீளாய்வுக் கூட்டத்திலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X