Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மே 14 , பி.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
முள்ளங்கியை பலர் விரும்புவதும் இல்லை. குறிப்பாக குழந்தைகள் முள்ளங்கி என்றாலே முகத்தை தூக்குகிறார்கள். ஆனால் அதில் உள்ள தாதுக்கள் மற்றும் விட்டமின்கள் நிறைந்துள்ளன.
சிறுநீரக கற்களை முற்றிலும் கரைப்பதற்கு சக்தி படைத்தது முள்ளங்கி. சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் முள்ளங்கியை வேக வைத்து, அந்த நீரை குடித்து வர சிறுநீரக கற்கள் முற்றிலும் கரைந்து போகும். தொடர்ந்து முள்ளங்கியை பயன்படுத்தி வர மீண்டும் சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கிறது.
நல்ல குரல் வளம் பெற முள்ளங்கி பெரிதும் பயன்படுகிறது. முள்ளங்கி சாரெடுத்து இளம் சூட்டில் காலையில் குடித்து வர, குரல் வளம் பெறும். தெளிவான பேச்சு வரும். தொண்டை தொடர்பான பிரச்சினைகளையும் தீர்க்கிறது. முள்ளங்கியானது விலை மலிவாக கிடைக்கும் ஒரு காய்கறியாகும். இதன் பயன்களை குழந்தைகளுக்கு எடுத்துரைத்து, அதை சாப்பிட வைப்பது பெற்றோரின் கடமையாகும்.
முள்ளங்கி சாப்பிடுவதால் கார்போஹைதரேட் நன்றாக செரிமானம் ஆகிறது. முள்ளங்கி மூல வியாதியின் அறிகுறிகளை விரைவில் போக்குகிறது. மேலும் இதன் சாற்றை குடிப்பதால் செரிமான உறுப்புகளையும், கழிவுறுப்புகளையும் சரி செய்து மூல வியாதி குணமடைகிறது.
முள்ளங்கி கல்லீரலுக்கு சிறந்த நண்பன். இதில் உள்ள கந்தக சத்துக்கள் பித்தநீரை சீராக சுரக்கச் செய்யும். இதனால் கொழுப்பு மற்றும் மாவு சத்துக்கள் நன்றாக ஜீரணமாகும். பித்தப்பையில் கற்களும் தோன்றாது, இரத்தத்தில் கெட்ட கொழுப்புகள் சேருவதும் தடுக்கப்படும், மேலும் இரத்தத்தில் பிராணவாயுவும் அதிகமாகும்.
3 hours ago
18 Oct 2025
18 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
18 Oct 2025
18 Oct 2025