மொஹொமட் ஆஸிக் / 2017 மே 24 , பி.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
'பெருந்தோட்டங்களைப் பற்றிய போதிய அறிவில்லாதவர்களே, இன்று தோட்ட நிர்வாகிகளாக நியமிக்கப்படுகின்றனர். இவ்வாறானவர்கள் அரசியல் ஆதரவுடன் நியமிக்கப்படுவதால், பெருந்தோட்டங்கள் இன்று காடுகளாக மாறி வருகின்றன' என்று, மத்திய மாகாண சபை உறுப்பினர் எம்.சிவஞானம் தெரிவித்தார்.
அத்துடன் 'ஒரு தோட்டத் தொழிலாளி, தான் உயிர்வாழும்போதே, ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி என்பவற்றை பெற்றக்கொள்வதில்லை. அவர் மரணித்தப் பின்னர் பல போராட்டங்களின் பின்னரே, அவரது உறவுகள் மேற்படி நிதிகளை பெற்றுக்கொள்கின்றனர். இது கவலைத்தரும் விடயமாகும்' என்றும் அவர் கூறினார்.
மத்திய மாகாண சபை அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார். இங்கு மேலும் கூறிய அவர்,
'அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம், மக்கள் தோட்ட அபிவிருத்தி யாக்கம், எல்கடுவ பிளாளன்டேசனின் கீழுள்ள தோட்டங்கள் காடுகளாக மாறியுள்ளன. காட்டு விலங்குகள், விஷ ஜந்துக்களுடன் போராடியே தொழில் செய்யவேண்டிய நிலைக்கு தோட்டத் தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
தேயிலைத் தொழிற்சாலைகளில் அதிகமானவை இன்று மூடப்பட்டுவிட்டன. இதனால், தோட்டத் தொழிலாளர்களே பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர். தேயிலைக் கொழுந்துகளை வேறு தொழிற்சாலைகளுக்கு அனுப்புவதிலும் தரகுப் பணம் பெறுவதிலுமேதான், தோட்ட நிர்வாகங்கள் அதிக அக்கறைக் காட்டுகின்றன. பெருந்தோட்டங்கள் பற்றிய நுணுக்கங்கள் தெரியாத அரசியல் ஆதரவுபெற்றவர்களே, நிர்வாகிகளாக நியமிக்கப்படுவதால் பெருந்தோட்டங்கள் இன்று காடுகளாக மாறிவருகின்றன.
எனவே, தோட்டத் தொழிலாளர்களுக்கு பெருந்தோட்டங்களைப் பிரித்துக்கொடுத்து, அவர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்ற வேண்டும்' என்றும் அவர் கோரினார்.
1 hours ago
8 hours ago
17 Jan 2026
17 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago
17 Jan 2026
17 Jan 2026