2025 ஜூலை 05, சனிக்கிழமை

கூரைத்தகடுகள் வழங்க நடவடிக்கை

Kogilavani   / 2016 ஜூலை 29 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதி மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின்  15 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில்  28 தோட்டங்களைச் சேர்ந்த 472 தொழிலாளர் குடும்பங்களுக்கு கூரைத்தகடுகள் வழங்கி வைக்கப்படவுள்ளன.

10,039 கூரைத் தகடுகள் வழங்கி வைக்கப்படவுள்ளதாக அமைச்சின் ஊடக் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதி மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம்; தலைமையில், நாளை சனிக்கிழமை மு.ப 10.30 மணிக்கு நோர்வூட் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .