2021 ஜூன் 24, வியாழக்கிழமை

சுற்றாடலுக்கு பங்கம் விளைவித்த இருவருக்கு எதிராக வழக்குத் தாக்கல்

ஆ.ரமேஸ்   / 2020 ஜனவரி 10 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராகலைப் பகுதியில் சுற்றாடலுக்கு பங்கம் விளைவித்தமை தொடர்பில் இருவருக்கு எதிராக வலப்பனை நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

வலப்பனை பிரதேச சபைக்குட்பட்ட இராகலை நகரில், குறித்தப் பகுதியை பரிசோதனைச் செய்வதற்காக இராகலை பிரதேச பொது மக்கள் சுகாதாரப் பிரிவினர் நேற்று (9) அங்கு விஜயம் செய்தததுடன், ஆற்றுநீரில் மலசலக்கூட கழிவுகளைக் கலப்பதற்கான ஏற்பாடுகளை செய்திருந்த சந்தேகநபர்கள் இருவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். 

சுகாதார அதிகாரி சம்பத் உள்ளிட்ட பொது சுகாதார அதிகாரிகளான ஸ்ரீகாந் ,ரேஸ் தசநாயக்கா ஆகியோர் அடங்கிய குழுவினர் குறித்த பகுதிக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .