2021 ஜூன் 16, புதன்கிழமை

நடமாடும் சேவை

Sudharshini   / 2015 ஒக்டோபர் 08 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கு. புஸ்பராஜ்

அக்கரப்பத்தனை  நகரத்திலுள்ள கடைத்தொகுதிகளுக்கு  நுவரெலியா பிரதேச சபை அதிகாரிகள், இன்று  (08) விஜயமொன்றை மேற்கொண்டு, அங்கு நிலவும் குறைபாடுகள் தொடர்பில் கலந்துரையாடினர்.

அக்கரப்பத்தனை நகரிலுள்ள வர்த்தகர்கள் எதிர்நோக்கும் குடிநீர் பிரச்சனை மற்றும் வரிப்பணம் தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டது.

நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து நகரங்களிலும் நிலவும் குறைபாடுகளை நிவர்த்திக்க விசேட நடமாடும் சேவையொன்றை  இம்மாதம் 15ஆம் திகதி நடத்த  நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதன்போது சகல பிரச்சினைகளையும் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்  என பிரசேத சபையின் செயலாளர் பிரதீப்  தெரிவித்தார்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .