Freelancer / 2024 மார்ச் 27 , பி.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்
நுவரெலியாவில் பதுங்கியிருந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படை கைது செய்துள்ளது.
நுவரெலியாவில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் பதுங்கியிருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பிலேயே மேற்படி சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கஹனவிடகே டொன் நந்தசேன என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் தனது மனைனவியுடன் நுவரெலியாவில் தலைமறைவாக இருந்த போதே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இலங்கைக்கு திரும்புவதற்கு முன்னர், சிறிது காலம் இந்தியாவில் தலைமறைவாக இருந்துள்ளார்.
அண்மையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்ட 09 கிலோ கிராம் எடையுள்ள ‘ஐஸ்’ போதைப்பொருள் இவர் மூலமே இலங்கைக்குள் கடத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். R
14 minute ago
31 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
31 minute ago
3 hours ago