2021 ஜூன் 24, வியாழக்கிழமை

பஸ் தரிப்பிடத்துக்கு சித்திரம்

Editorial   / 2020 ஜனவரி 06 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

றம்ஸி குத்தூஸ்

பொதுஜன பெரமுனவின் அரசில், முஸ்லிம்கள் முக்கிய பங்குதாரர்களாக மாறவேண்டிய தேவை இருப்பதாகத் தெரிவித்த தொழிலதிபர் எம்.எல்.ஏ.பாரிஸ், நம்பிக்கைக்குரியவர்களாக முஸ்லிம் சமூகம் மாற வேண்டுமெனவும் தெரிவித்தார்.

உடுநுவரை, யட்டினுவர பிரதேச சபைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தெவினுவர கல்வி வலய பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில், பாடசாலை  அதிபர்கள் குழுவை  கெலிஓயா, எலமல்தெனியாவிலுள்ள, பேல் வைட் ப்லேஸ் கேட்போர் கூடத்தில் தொழிலதிபர் எம்.எல்.ஏ.பாரிஸ் சந்தித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அவர்,

தெவிநுவர கல்வி வலய முஸ்லிம் பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

முஸ்லிம் சமூகம், அரசாங்கத்துக்கும் கட்சிக்கும் மாற்றம் செய்யக் கூடிய சமுதாயமாக இருக்கக்கூடாது என்றும் மாறாக பொய்ப் பிரசாரங்களுக்கு முஸ்லிம்கள் சோரம் போகும்  நிலமையிலிருந்தும் மாறி, ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் நம்பிக்கைக்குரியவர்களாக மாற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதன்போது, பிரதேச சபை உறுப்பினர்களான எம்.மசீனம் ஏ.ஜீ.எம்.ரிஸ்வி உள்ளிட்ட அதிபர், ஆசிரியர்கள்,  அரச உத்தியோகத்தர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .