2021 ஜூன் 16, புதன்கிழமை

புகையிரதத்திலிருந்து தவறி விழுந்தவர் பலி

Gavitha   / 2015 ஒக்டோபர் 05 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

பொல்கஹவெலயிலிருந்து கடுகன்னாவை நோக்கி சென்ற புகையிரதத்தில் பயணித்த வயோதிபர், ரம்புக்கனை பகுதியில் வைத்து தவறிவிழுந்து உயிரிழந்துள்ளதாக, ரம்புக்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (04) இடம்பெற்றுள்ளது.

ரம்புக்கனை, கதுருகொடியாபொல புகையிரத சுரங்கப்பாதையை கடந்துச் செல்லும் போதே, இவர் புகையிரதத்திலிருந்து தவறி விழுந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 65-70 வயது மதிக்கத்தக்க இவரது சடலம் தற்போது ரம்புக்கனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சடலத்தை அடையாளம் காண்பதற்கு பொதுமக்கள் உதவவேண்டும் என்றும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .