2021 ஜூன் 16, புதன்கிழமை

’மலையகப் பெண்கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்லர்’

Yuganthini   / 2017 ஜூன் 08 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

'மலையக சமூக மேம்பாட்டுக்காக அயராது உழைத்து வரும் பெருந்தோட்டப் பெண்கள்  எதற்கும் சளைத்தவர்கள் அல்லர் என்ற உணர்வை, தேசிய ரீதியில் நிரூபித்துக் காட்டியுள்ளார்கள்' என்று, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

சர்வதேச தொழிற்சங்க சம்மேளன ஆசிய - பசுபிக் ஸ்தாபனத்தின் புதிய பொதுக் காரியதரிசி சோயா யோசிதாவுக்கு வரவேற்பளிக்கும் நிகழ்வு, கொழும்பிலுள்ள சௌமிய பவனில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு மேலும் கூறிய அவர்,

பெருந்தோட்டங்களில் 90 சதவீதமான பெண்கள், தோட்டத் தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை தோட்டங்களில் ஒரு வலுவான அமைப்பாக மாற்றியுள்ளனர். இந்நிலையில், இ.தொ.கா, மலையகப் பெண்களுக்கு, 60 சதவீத ஒதுக்கீடுகளை வழங்கயுள்ளது.

அவர்கள் இன்று தொழிற்சங்கத்தில் பிரதிநிதிகளாக, மகளிர் இணைப்பதிகாரிகளாக, அரசாங்க நிறுவனங்களில் உயர்பதவிகளையும் வகித்து வருகின்றார்கள்.

பிரதேசசபை, மாகாணசபைகளில் இவர்களது எண்ணிக்கை ஒரு காலத்தில் அதிகரித்துக் காணப்பட்டது. அத்துடன், தலைமைத்துவப் பயிற்சி, கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள், ஒன்றுகூடல்கள் மூலமாக, இவர்களது ஆற்றல்கள் விருத்தி செய்யப்படுகின்றன.

அந்த வகையில், எமது வலையமைப்பின் ஊடாக உள்நாட்டில் மாத்திரமல்ல, வெளிநாடுகளிலும் போதிய பயிற்சிகள் இவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றன. தொழிற்சங்க சம்மேளனம், சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம்  ஆகியவற்றின் பங்களிப்போடு, தலைமைத்துவ பயிற்சிகளுக்காக் ஜப்பான், சுவீட்சர்லாந்து, சிங்கப்பூர், நேபாளம் போன்ற நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றார்கள்.

எதிர்காலத்தில் இவர்களது திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்ள தொழிற்சங்க சம்மேளனம், சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் போன்ற ஸ்தாபனங்கள் முன்வர வேண்டும்' என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .