Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 நவம்பர் 15 , பி.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
அக்குறணை, குருகொடை பிரதேசத்தில் சட்ட விரோதமான முறையில் அறுக்கப்பட்ட மாடு ஒன்றின் சுமார் 100 கிலோ கிராம் இறைச்சியையும் அதன் பாகங்களையும் அலவத்துகொடை பொலிஸார், ஞாயிற்றுக்கிழமை (15) காலை கைப்பற்றினர்.
தமக்கு கிடைத்த தகவலுக்கமைய திடீர் சோதனையை நடத்திய பொலிஸார், வீடொன்றை சுற்றிவளைத்துள்ளனர். அப்போது வீட்டின் பின் புறத்தில் 6பேர் மாடொன்றை அறுத்துக்கொண்டிருந்துள்ளனர்.
அவர்களில் மூவர், பொலிஸாரை கண்டதும் தப்பியோடியுள்ளனர். ஏனைய மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, சட்டவிரோதமாக மாடறுக்கும் அவ்விடத்துக்கு அருகாமையில் கட்டப்பட்டிருந்த மேலும் 10 மாடுகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
இம்மாடுகள் திருடப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் தெரிவிக்கும் பொலிஸார், மாடுகளின் உரிமையாளர்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், தமது மாடுகள் திருடப்பட்டிருப்பின் பொலிஸாருடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
தப்பிச் சென்றுள்ள மூன்று சந்தேகநபர்களையும் கைது செய்வதற்கு விசேட பொலிஸ் குழுவை நியமித்துள்ளதாகவும் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களையும் கைப்பற்றிய 10 மாடுகளையும் அறுக்கப்பட்ட மாட்டின் இறைச்சியையும் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் இன்று திங்கட்;கிழமை (17) ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .