2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

கண்டி மேயர் பதவி நீக்கம்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 01 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி மாநகர மேயர் எல்.பீ.அலுவிஹாரயை உடனடியாக மேயர் பதவியிலிருந்து நீக்கியுள்ளதாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்தார்.

ஐ.தே.க. அதிகாரத்தின் கீழ் இயங்கும் கண்டி மாநகர சபையின் முதல்வரான மேயர் எல்.பீ.அலுவிஹார தொடர்பில்  நடத்தப்பட்ட மோசடிகள் சம்பந்தமான விசாரணையின் பின்னரே அவர் பதவி நீக்கப்பட்டதாக முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க கூறினார்.

இது சம்பந்தமாக அதி விசேட வர்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் மேலும் கூறினார்.

ஐ.தே.க. மாநகர சபையான கண்டி மாநகர சபையின் முதல்வர் எல்.பீ.அலுவிஹாரை சில மாதங்களுக்கு முன் இடைநிறுத்தப்பட்டதுடன் அண்மையில் அரசுடன் இணைந்த உதவி மேயர் சமிந்த விக்கிரமசிங்க பதில் மேயராக நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .