2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

நாவலப்பிட்டியவில் டெங்கு நோய்க்கு இலக்காகி சிறுவன் மரணம்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 01 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

( எஸ்.சுவர்ணஸ்ரீ )

டெங்கு நோய்க்கு இலக்காகி  நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்படட்ட ஆறு வயது சிறுவனொருவன் சிகிச்சை பலனின்றி உயிழந்துள்ளார். நாவலப்பிட்டி நகரசபைக்கு உட்பட்ட சொய்சாகலை பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.ஆர்.முனாப் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறிப்பிட்ட சிறுவனுக்கு கடந்த 25ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதன் பின்பு இந்தச் சிறுவனை அவனின் பெற்றோர்கள் கடந்த 29ஆம் திகதி நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இதன்பின்பு அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப்பெற்று வந்த சிறுவன் சிகிச்சைப்பலனின்றி நேற்று  31ஆம் திகதி உயிரிழந்துள்ளார். இந்நிலையில், நாவலப்பிட்டி பிரதேசத்தில் டெங்கு நோய் அதி தீவிரமாக பரவி வருவதாக சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

இவ்வருடம் ஆரம்பம் முதல் ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி வரை நாவலப்பிட்டி வைத்தியசாலையில் டெங்கு நோயாளர்கள் 190 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வெளியேறியுள்ளனர் என்றும் மேலும் டெங்கு நோயினால் இதுவரை மூன்று பேர் இறந்துள்ளனர் என்றும் சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

மேலும் நாவலப்பிட்டி பொதுசுகாதார அத்தியட்சகர் பிரிவில் 115 பேரும் நுவரெலியா ,மஸ்கெலியா ,கொத்மலை ,தலவாக்கலை ,கொட்டகலை ஆகிய பொதுசுகாதார அத்தியட்சகர் பிரிவுகளில் தலா பத்து பேரும் மேலும் கினிகத்தேனை உட்பட பல பிரதேசங்களைச்சேர்ந்த பலர் டெங்கு நோய்த் தொற்றுக்கு உள்ளாகி நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வெளியேறியுள்ளனர்.

இதேவேளை கடந்த வருடம் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 109 டெங்கு நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வெளியேறியுள்ளனர் என்றும் இவ்வருடம் இந்தத்தொகை அதிகரித்துள்ளதாகவும் சுகாதாரத்தரப்பினர் மேலும் தெரிவித்தனர். இந்த நிலையில் டெங்கு நோய்த்தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் செயற்படவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுசுகாதார பரிசோதகர்கள் கருத்து தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .