2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

நீதிபதியின் வாசஸ்தலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதி தப்பியோட்டம்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 01 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

(நதீர் சரீப்தீன்)

நீதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தின் சுற்றுபுறச் சூழலை துப்பரவு செய்வதற்காக சிறைச்சாலை அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்ட கைதிகளில் ஒருவர் தப்பியோடிய சம்பவமொன்று கேகாலையில் அண்மையில் இடம்பெற்றுள்ளதாக கேகாலைப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கேகாலை நீதிமன்ற நீதிபதியின் உத்தியோகபூர்வ வாஸ்தலத்தின் சுற்றுப்புறச் சூழலை சுத்தம் செய்யவென பொதுச்சேவையின் நிமித்தம், சிறு குற்றங்களுக்காக தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் அழைத்துச் செல்லப்பட்ட சந்தர்ப்பத்தில் மேற்படி அதிகாரிகளின் கண்ணிலிருந்து மாயமாக மறைந்து தப்பியோடியுள்ளார்.

தப்பியோடிய கைதி குருநாகல்ப் பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும் கஞ்சா அருகில் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் குருநாகல் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு அந்நீதிமன்றம் விதித்த 7,500 ரூபாய் தண்டப் பணத்தை செலுத்த முடியாத காரணத்தினால் மூன்று மாதகால சிறைத் தண்டணை விதிக்கப்பட்டு, கேகாலை சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டவர் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தப்பியோடிய கைதியை பிடிப்பதற்கு அவசியமான அறிவுறுத்தல்களை சகல பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்கியிருப்பதாகவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருப்பதாகவும் கேகாலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .