2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

மதுபானம் அருந்தி பிக்கு வேடத்திலிருந்த மூவருக்கு பிடியாணை

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 02 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி மாத்தளை வீதியில் வீதி விபத்து ஒன்றினை ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்று கொண்டிருக்கும்போது கைது செய்யப்பட்ட பிக்கு வேடத்திலிருந்த மூவருக்கும் கண்டி பிரதம நீதவான் லலித் ஏக்கனாக்க நேற்று பிடியாணை பிறப்பித்தார்.

கண்டி மஹய்யாவ பிரதேசத்தில் வீதி விபத்து ஒன்றை ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டியை பரிசோதிக்கும்போது அதிகளவில் மதுபானம் அருந்திய நிலையில் பிக்கு வேடத்திலிருந்த மூவரையும் முச்சக்கரவண்டியின் சாரதியையும் கைது செய்த கட்டுகஸ்தோட்டை பொலிஸார் பொலிஸ் பிணையில் நால்வரையும் விடுவித்து நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டனர்.

இருந்தபோதும் அவர்கள் மூவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. ஆகவே மூவருக்கும் பிடியாணை பிறப்பித்த கண்டி பிரதான நீதவான் லலித் ஏக்கனாயக்க, முச்சக்கரவண்டியின் சாரதிக்கு 21,000 ரூபாய் அபராதம் விதித்ததுடன் ஒரு வருடத்துக்கு சாரதி அனுமதிப்பத்திரத்தை தடை செய்தார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .