2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

இராணுவ வீரரின் மனைவியின் நகை திருடிய இராணுவ வீராங்கனை கைது

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 03 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

இராணுவத்திலிருந்து யுத்தத்தின் போது உயிரிழந்த யுத்தவீரர் ஒருவரின் மனைவி தன் கணவனின் அஞ்சலி நிகழ்வுக்காக சென்றிருந்த சமயம் அவருடைய 90,000 ரூபாய் பெருமதியான தங்க நகைகளை திருடியதாக சந்தேகத்தின் பேரில்  இராணுவ வீராங்கனை ஒருவரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.

இராணுவ சேவையில் இருக்கும் போது யுத்தத்தால் உயிரிழந்த தனது கணவனின் நினைவஞ்சலி நிகழ்வு குண்டசாலை பிரதேசத்தில் நடைபெறுவதாக கிடைத்த அழைப்பின் பேரில் அவர் தனது மகளுடன் அவ்வஞ்சலிக்காக சென்றுள்ளார்.

அஞ்சலி முடிவுற்ற பின் வீட்டுக்கு திரும்பி வந்த போது தனது தங்க நகைகள் காணாமற்போயுள்ளதை கண்டுள்ளார். இதனை பல நாட்களாக தேடியும் கிடைக்காதவிடத்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

பொலிஸ் விசாரணை தொடங்கியதுடன் நகைகளை திருடியதாக சந்தேகிக்கப்படும் குறிப்பிட்ட இராணுவ வீராங்கனை அடகு வைத்திருந்த நகைகளை மீட்டு மீண்டும் இவ்வீட்டுக்கே கொண்டு வந்து வைத்துள்ளார்.

இருப்பினும் அயலவர் ஒருவர் கொடுத்த தகவலின் பிரகாரம் பொலிஸார் இவ்வீராங்கனையை கைது செய்து மேலதிக விசாரணைகளை நடாத்திய போது நகைகள் அடகு வைக்கப்பட்ட ரசீதுகள்
கண்டெடுக்கப்பட்டன.

கைது செயயப்பட்ட வீராங்கனையை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் கூறினர். கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.பீ. தியகெலினாவல தலைமையில் மேலதிக விசாரனைகள் நடைபெறுகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .