2021 ஜூன் 19, சனிக்கிழமை

ஒரு கோடி ரூபா பெறுமதியான பலகைகள் தீயினால் சேதம்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 06 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எப்.எம்.தாஹிர்)

பதுளை நகரிலுள்ள மர ஆலையொன்றுக்குள் திடீரென ஏற்பட்ட தீயின் காரணமாக சுமார் ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமான மரப்பலகைகள் கருகி சாம்பலாகியுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றது. பதுளை மாநகரசபை தீயணைக்கும் பிரிவு, பொலிஸார் மற்றும் பொதுமக்கள் இணைந்து இந்தத் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இவ்விபத்துக்கு மின்சாரக்கசிவு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பதுளை பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .