2021 ஜூன் 18, வெள்ளிக்கிழமை

கொலை மிரட்டல் குற்றச்சாட்டில்

Super User   / 2010 செப்டெம்பர் 05 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி, கட்டுகஸ்தோட்டை பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றுக்கு சீருடையுடன் சென்று கொலை அச்சுறுத்தல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டில் விமானப் படை வீரர் ஒருவரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் இன்று திங்கட்கிழமை கைது செய்துள்ளனர்.

தனது மனைவியுடன் தொடர்பான ஒருவரின் வீட்டுக்கே  இவ்விமானப் படை வீரரும் இன்னும் இருவரும் சென்று கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவும்  பொலிஸ் விசாரணையின்போது தெரியவந்தள்ளது.

கைது செய்யப்பட்ட விமானப்படை வீரர் கண்டி பிரதான நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாகவும், மற்றைய இருவரையும் கைது செய்வதற்காக மேலதிக விசாரணைகள் நடாத்தப்படுவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .