2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

வாகன விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி படுகாயம்

Super User   / 2010 செப்டெம்பர் 06 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                (நதீர் சரீப்தீன்)

பலாங்கொடை நகரின் புதிய பஸ் நிலையப் பாதையில் நேற்றிரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள்-கார் விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் படுகாயங்களுக்கு உள்ளாகி பலாங்கொடை ஆதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றிரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தின் போது வேகமாக வந்த கார்  மோட்டார் சைக்கிளில் மோதி விட்டு  தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை 10.30 மணியளவில் விபத்துடன் தொடர்புபட்ட காரையும் அதன் ஓட்டுனரையும் சந்தேகத்தின் பெயரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .