2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

கண்டியில் பி.ரி.ஐ. பக்ரீறியா தெளிக்கத் திட்டம்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 13 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)

கியூபாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பி.ரீ.ஐ. பற்றீரியாத் தொகுதியின் 10,000 லீற்றர்  வந்து சேர்ந்துள்ளதாகவும் இதனை பரீட்சார்த்தமாக கண்டி மாவட்டத்தில் டெங்கு நோய் பரவலாக பரவும் பிரதேசங்களாக இனம்காணப்பட்டுள்ள அக்குறணை, கண்டி நகரம், கம்பளை ஆகிய இடங்களில் அடுத்த சில தினங்களில் தெளிக்க உள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

உள்ளுரில் தயாரிக்கப்பட்ட பக்ரீறியா ஏற்கனவே மட்டக்குளி, பேலியகொடை ஆகிய இடங்களில் பரீட்ச்சிக்கப்பட்டது.

டெங்கு நோயை பரவச் செய்யும் நுளம்புகளைக் கட்டுப்படுத்த இம்முறையைக் கையாள வேண்டும் என சுகாதார அமைச்சிற்கு  பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வந்தன.

அதேநேரம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் இதற்கு கூடுதல் செலவு ஏற்படுவதன் காரணமாக உள்ளுர் தயாரிப்பை திறந்த சந்தையில் விடவேண்டும் என்றும் சில அமைப்புக்கள் வேண்டுகோள் விடுத்து வந்துள்மையும் குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .