Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 14 , மு.ப. 08:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
மத்திய மாகாணசபையின் உறுப்பினர் கணபதி கனகராஜுக்கு இலங்கைத் தொழிலாளர்காங்கிரஸின் அரசியற் பிரிவு உதவிச் செயலாளர் பதவி இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் கால்நடை அபிவிருத்தி மற்றும் சமூக ,கிராமிய அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானினால் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளராகவிருந்த கணபதி கனகராஜ்,அந்த முன்னணியிலிருந்து விலகி அண்மையில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுடன் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் நிதிச் செயலாளராகவிருந்து அந்த முன்னணியிலிருந்து விலகி இ.தொ.கா.உடன் இணைந்து கொண்ட அம்பகமுவ பிரதேசசபை உறுப்பினர் செல்லையா சிவசுந்தரம் இ.தொ.கா.வின் உதவிச் செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .