2021 ஜூன் 24, வியாழக்கிழமை

பிரசவித்தவுடன் சிசுவை படுகொலை செய்து மலசலகூடத்தில் வீசிய தாய்

Menaka Mookandi   / 2010 நவம்பர் 15 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிறந்து ஒரு நாளான சிசுவை படுகொலை செய்த தாய், அந்த சிசுவின் சடலத்தை மலசலகூடத்தில் எறிந்த சம்பவமொன்று மாத்தளை, டங்கன் தோட்டப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மாத்தளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றுக்கமைய சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடையதான தாய் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர், மாத்தளை, செலகம் தோட்டத்தைச் சேர்ந்த தமிழ் பெண்ணொருவர் என பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்தள்ளது.

கடந்த 12ஆம் திகதி வெள்ளிக்கழமை குறித்த சிசு படுகொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் அந்த சிசுவின் சடலத்தை நேற்றைய தினம் கண்டுபிடித்ததாகவும் கூறினார்.

அத்துடன், மேற்படி சிசுவின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனைகள் இன்று திங்கட்கிழமை, மாத்தளை வைத்தியசாலையில் இன்று நடைபெறவுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.(MM)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .