2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் படு காயம்

Super User   / 2011 மார்ச் 28 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக் )

தம்புள்ளை கலேவலை வீதியில் இன்று திங்கட்கிழமை  இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் படு காயங்களுக்கு உள்ளாகிவுள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்தனர்.

க.பொ.த (சா/த) பரீட்சை தொடர்பாக விபரங்களை பெறுவதற்காக கொழும்பு செல்லும் வழியிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை மற்றும் இரு பிள்ளைகள் காயமடைந்துள்ளதுடன் தந்தை மற்றும் ஒரு பிள்ளையின் நிலை கவலைக்கிடமாக உள்ளன.

காயமடைந்தவர்கள் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார் மேறகொணடு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .