2021 டிசெம்பர் 08, புதன்கிழமை

இ.தொ.கா.. உறுப்பினர்கள் ஹட்டனில் சத்தியப்பிரமாணம்

Menaka Mookandi   / 2011 மார்ச் 29 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸைச் சேர்ந்த உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண வைபவமொன்று நாளை மறுதினம் 31ஆம் திகதி காலை 10 மணிக்கு ஹட்டனில் இடம்பெறவுள்ளது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் தலைமையில் கீழ் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் இ.தொ.கா.வின் முக்கியஸ்தர்களும் ஆதரவாளர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்த சத்தியப்பிரமாண வைபவத்தினைத் தொடர்ந்து குறிப்பிட்ட உறுப்பினர்கள் தமது சபைகளுக்குச் சென்றும் தமது சத்தியப்பிரமாணங்களை மேற்கொள்ளவுள்ளனர்.

நடைபெற்ற முடிந்த உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் இ.தொ.கா.வைச் சேர்ந்த 29 உறுப்பினர்கள் வெற்றிபெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .